×

மயிலாடுதுறை கோட்டத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு இயற்கை முறையில் குருவை சாகுபடி செய்யும் விவசாயிகள்

நாகை  மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு குருவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் நீர் பற்றாக்குறையை சமாளிக்க பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட தொடங்கியுள்ளனர்.  மயிலாடுதுறை கோட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குருவை நெற்பயிர் சாகுபடி செய்வது வழக்கம்.கர்நாடகாவில் போதிய மழையின்மை காரணமாக காவிரியில் நீர் வரத்து பொய்த்தது இதையடுத்து விவசாயிகள் நிலத்தடி நீரைக் கொண்டு குருவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நிலங்களை உழுது சிற்படுத்தி பாழ் நாற்றாங்கால் விட்டு நடவு நட்டு ஆரம்பக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைத்துள்ள நிலையில் ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது எதிர்பாராத இயப்புக்களை ஏற்படுத்தும் என்கின்றனர் விவசாயிகள். ஏற்கனவே குறைவான அளவில்  தண்ணீர் கிடைத்தாலும் இழப்பை ஏற்படுத்தாத பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடுவதாக கூறுகின்றனர். மயிலாடுதுறை, குத்தலாம்மாப்படுகை, சோயம்பேட்டை, வாணாதிராஜபுரம், கடலங்குடி போன்ற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் பாரம்பரிய நெல்ரகங்களான மாப்பிள்ளை சம்பா,அறுவதங்குருவை, பொம்மி உள்ளிட்ட பல்வேறு இயற்கை நெல் ரகங்களை பயன்படுத்தி குருவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.

இதுபோன்று பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவாசத்தை மேற்கொண்டால் பெரும் இழப்புகளை தவிர்க்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முழுக்க முழுக்க நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளதாக கூறும் விவசாயிகள் நடப்பாண்டுக்கு குருவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து விவசாய ஈடு பொருட்களை மானிய விலையில் வழங்கி விவசாயிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும் வெள்ளமோ கடும் வறட்சியோ எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை கைவிடமாட்டோம் என கூறும் விவசாயிகளுக்கு அரசு துணை நின்று அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. 


Tags : gurus ,Mayiladuthurai Kota , Mayiladuthurai , groundwater,Farmers,Cultivate the guru
× RELATED ‘ஒரே ஒரு குருக்கள் வர்றார்..’ஒன்லிடென் பீப்பிள்.. நாதக வேட்பாளர் ஆவேசம்